அந்த இளம் வீரரால் தான் இந்தியா உலக கோப்பையை வெல்லும்! மைக்கேல் கிளார்க் வெடித்த பட்டாசு!

ஜஸ்ப்ரித் பும்ராவின் திறமையான பந்து வீச்சால் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இயலும் என்று கடந்த உலகக் கோப்பையின் வெற்றி கேப்டனான மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் இந்திய அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ராவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

அதாவது பும்ராவிடம் அனைத்து விதமான யுக்திகளும் உள்ளன. அவரால் தொடக்கத்திலும், 35 ஓவர்களிலும், இறுதியாகவும் திறமையாக பந்துவீச இயலும். அவரைப்போன்ற திறமையான பந்துவீச்சாளர் இருந்தால் எந்த அணியினரும் வெற்றி பெற இயலும் என்றும் கூறியுள்ளார்.

இந்த உலகக் கோப்பை மட்டுமின்றி கடந்த இரு வருடங்களாக இந்திய அணிக்காக பல்வேறு தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். அவரால் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் பந்துவீச இயலும். உடலிலும், மனதிலும் சிறந்த வலிமை உடையவராக திகழ்கிறார். அவரால் இந்திய அணிக்கு நிச்சயம் உலக கோப்பையை வென்று தர இயலும் என்றும் மைக்கேல் கிளார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுப்பற்றி கூறுகையில், டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஓராண்டு அணியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் திறம்பட செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வென்றால் டேவிட் வார்னரின் பங்கு நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ஆருடம் கூறியுள்ளார்.

2007 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் கிளார்க் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.