ஆட்டத்தை 5ம் நாளுக்கு கொண்டு சென்ற கம்மின்ஸ்...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிச 26ம் தேதி தொடங்கியது.


முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 443 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் கம்மின்ஸ் 61 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற இன்னும் 141 ரன்கள் தேவை. அனால் இன்னும் இரண்டு விக்கெட்கள் மட்டுமே கைவசம் உள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.