மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்திய அணி??

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே ஆன மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு மும்பையில் நடைபெற உள்ள நிலையில், வெற்றிகரமாக இந்திய அணி தொடரை வென்று கோப்பையை கைப்பற்றுமா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.


மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் இரண்டு போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்து வருகின்றனர். முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி மேற்கிந்திய அணியை வீழ்த்தியது. 

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் கடைசியாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆகையால் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் இருந்து வருகின்றனர். இன்றைய தினம் இந்த தொடரின் மூன்றாவது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க உள்ளார் . மேலும் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் , லோகேஷ் ராகுல் , ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாட உள்ளனர். அதேபோல் மேற்கிந்திய தீவுகளில் இந்தியர்களைப் போலவே மிகவும் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளனர். இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சை அவர்கள் சமாளித்து இந்த தொடரை வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகம்தான்.

இன்றைய தினம் நடைபெறப் போகிற போட்டியை வென்றால் மட்டுமே இந்த தொடரை இந்திய அணியால் வெற்றிகொண்டு கோப்பையை கைப்பற்ற இயலும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது.