யார்க்கரில் கலக்கப்போவது பூம்ராவா?- மலிங்காவா?முதல் டி20 போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற உள்ளது.


இலங்கை அணி இந்திய அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சமீபத்தில் இந்திய வந்துள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவிற்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் பங்கேற்கிறார். 

பும்ரா காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் விளையாடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியை பொறுத்தவரை யார்க்கர் மன்னன் மலிங்கா அந்த அணிக்கு கேப்டனாக தலைமை தாங்குகிறார். டி20 போட்டி என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.