ஒரு வாய்ப்பு கூட வழங்காமல் அணியிலிருந்து நீக்கப்பட்ட இளம் வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் தோனி இந்தமுறையும் அணியில் இடம்பெறவில்லை. ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கும் ஓய்வு அளிக்கப்படவில்லை. 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் விராட்கோலி இந்த தொடரில் மீண்டும் ஆட உள்ளார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணியில் இடம்பெறாமல் இருந்த முகமது சமி ,புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரன்களை வாரி குவித்த வேகப்பந்து வீச்சாளர் கலில் அகமது அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அணியில் சேர்க்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்த சஞ்சு சாம்சன் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஒரு வாய்ப்பு கூட கொடுக்காமல் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பாண்டிற்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன எனவும் சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்புகள் கூட கொடுக்கப்படாமல் அவர் அணியிலிருந்து ஏன் நீக்கப்படுகிறார் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் , ரவீந்திர ஜடேஜா , சிவம் துபே , வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர், புவனேஸ்வர் குமார், முகமது சமி, சஹால், குல்தீப் யாதவ்.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் டி20 அணியில் இடம்பெற்றிருக்கும் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.