இந்தியா-நியூசிலாந்து டி20! இந்திய அணி அறிவிப்பு! அதிரடியாக நீக்கப்பட்ட இளம் வீரர்! மீண்டும் அணிக்கு திரும்பிய ஷமி, ரோஹித் ஷர்மா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணி டி20 தொடரில் விளையாட நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இலங்கை தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல இலங்கை தொடரில் இடம் பெறாமல் இருந்த முகமது ஷமியும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 

இலங்கை அணிக்கு எதிரான கடைசி t20 போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அணியில் இடம்பெறாமல் இருக்கும் ஆர்டிக் பாண்டியா நீங்க தொடரிலும் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

காயம் காரணமாக கடந்த தொடர்களில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் தீபக் சஹர் இந்த தொடரிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி விவரம்!

தவான்,ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஷிவம் டுபே, ஸ்ரேயாஸ் அய்யர் ,ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ,சஹால்,வாஷிங்டன் சுந்தர் ,முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி.