மாஸ் காட்டிய ரோகித் சர்மா!இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா அணி?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களை குவித்து டிக்லேர் செய்துள்ளது.


அபாரமாக விளையாடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே சிறப்பாக அடி 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களை குவித்து டிக்லேர் செய்துள்ளது.

தென்ஆப்பிரிக்க அணியின் ஜார்ஜ் லிண்டே சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களையும், வேகப்பந்து வீச்சாளர் ரபடா 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த டெஸ்டின் இரண்டாம் நாளில் மீதமுள்ள ஒரு செஷனில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய உள்ளதால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள், தென்ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.