மீண்டும் சொதப்பிய புஜாரா! சரிவில் இருந்து மீட்ட கோலி,மயங்க் அகர்வால்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது.


இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் மற்றும் அனுபவம் வாய்ந்த புஜாரா இருவரும் வந்த வேகத்தில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினர் .

பின்னர் மயங்க் அகர்வால் மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது .சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 55 ரன்களிலும் , வீராட்கோலி 76 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

விகாரி 42 ரன்களுடனும் , ரிஷப் பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாசன் ஹோல்டர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .