வான்கேடேவில் சிக்சர் மழை பொழிந்த ரோகித் ஷர்மா, விராட் கோலி!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 240 குவித்தது.


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகிட் ஷர்மா மற்றும் லோகேஷ் ராகுல தொடக்கம் முதலே மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். 

லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி 56 பந்துகளில் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சிறப்பாக வளரக்கூடிய 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 240 ரன்களை குவித்தது.