மாஸ் காட்டிய ரஹானே! சொதப்பிய கோலி, புஜாரா! ஓரங்கட்டப்பட்ட அஸ்வின்,ரோஹித்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று இரவு தொடங்கியது .


இந்த போட்டிக்கான இந்திய அணியில் யாரும் எதிர்பாராத வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின் இந்த போட்டியில் அணியில் இடம்பெறவில்லை . மேலும் இந்திய அணியின் ரோகித் சர்மாவும் அணியில் சேர்க்கப்படவில்லை . குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறவில்லை .

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .

பின்னர் களமிறங்கிய  ரஹானே தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் இணைந்து இந்திய  அணியை சரிவிலிருந்து மீட்டார் . லோகேஷ் ராகுல் 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அனுமன் விகாரி ரஹானே உடன் இணைந்தார் .இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தது . விகாரி 32 ரன்களுக்கும் , சிறப்பாக விளையாடிய ரஹானே 82 ரன்களுக்கும்  ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின்  ரிஷப் பண்ட் 20 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் .மேற்கிந்திய தீவுகள் அணியின் கிமார் ரோச்  சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், கேப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் .