இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி t20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 174 ரன்களை குவித்துள்ளது.
ஹாட்ரிக் சிக்சர்! அசத்தலான பேட்டிங்! ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம்!
டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியினர் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா ஷிகர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், பின்னர் களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 35 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். மிக சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 33 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். இதில் ஒரு hat-trick சிக்சரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது.