சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்! கடைசியில் கைக்கொடுத்த வாஷிங்டன் சுந்தர்!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்து உள்ளது.


டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

ஷிகார் தாவன் மட்டும் நிதானமாக விளையாடிய 41 ரன்களை எடுத்தார். ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை கடைசியாக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் குறுநால் பாண்டியா சிறப்பாக விளையாடி சரிவில் இருந்து மீட்டனர். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தது. பங்களாதேஷ் அணியின் சார்பில் சபியுல் இஸ்லாம் மற்றும் அமினுல் இஸ்லாம் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.