ICC ODI தரவரிசையில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்!

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


நியூஸிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதன் மூலமாக இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தென்னாபிரிக்கா 111 புள்ளிகளுடன்  மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 854 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில நீடிக்கிறார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி 17 வது இடத்தில உள்ளார்.

ஒரு நாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நான்காம் இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.