இந்திய அணிக்கு இரண்டு புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்...

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி (நாளை) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரியாக விளையாடாத காரணத்தினால் இந்த போட்டிக்கான அணியிலிருந்து முரளி விஜய் , லோகேஷ் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.


இதனால் இரண்டு புதிய ஓப்பனிங் பேட்ஸ்ட்மேன்கள் களமிறங்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக ப்ரித்தீவ் ஷா இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக மாயங் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் நாளைய போட்டியில் மாயங் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்ட்மேன் ஹனுமன் விஹாரி இந்த போட்டியில் மாயங் அகர்வாலுடன்  களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.