மீண்டும் ஓப்பனிங் இறங்கி மாஸ் காட்டிய சச்சின்-ஷேவாக்! வான்கடேவில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரின் முதல் T20 போட்டியில் இந்தியா legends அணி மேற்கிந்திய தீவுகள் legends அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நாட்டை சேர்ந்த legends கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய legend's அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பந்து வீச முடிவு செய்தார். இதனால் முதல் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் legends அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 150 ரன்களை எடுத்தது. அந்த அணியின் சந்திரபால் அதிகபட்சமாக 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய legends அணியின் சார்பாக ஜாஹீர் கான், முனாஃப் படேல், ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய legends அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக் மற்றும் சச்சின் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடினார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சச்சின் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சேவாக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 74 ரன்களை குவித்து இந்திய legends அணியை வெற்றி பெறச் செய்தார். சிறப்பாக விளையாடி வெற்றிக்குக் காரணமாக இருந்த விரேந்திர சேவாக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.