நியூசிலாந்து அணியை தெறிக்கவிட்டு மாஸ் காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து ஆடினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் மன்றோ சிறப்பாக ஆடி 59 ரன்களும், ராஸ் டைலர் 54 ரன்களும் குவித்தனர். இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணியின் சார்பில் பும்ரா , சிவம் துபே, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை சேசிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் லோகேஷ் ராகுல் மற்றும் விராட் கோலி அபாரமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 56 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி 19 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது