இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி! ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது.


மேற்கிந்திய தீவுகள் அணி T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்றுள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் பங்கேற்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்க உள்ளது.

கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்ததால் மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெற்றது. ஆகையால் இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் ஏதாவது மாற்றம் செய்யப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.