இன்று 4வது டி20 போட்டி! இந்திய அணிக்காக புதிதாக களம் இறங்கப் போகும் இளம் வீரர்கள் யார் தெரியுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று விலிங்டனில் தொடங்க உள்ளது.


இந்தியா அணி நியூசிலாந்தில் டி20 ,ஒருநாள் போட்டி, மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.‌ கடந்த வாரம் தொடங்கிய டி20 தொடரில் நடந்த முடிந்த 3 ஆட்டங்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கடைசி போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று உள்ளது.

இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றதால் இந்த போட்டியில் இளம் வீரர்களான நவ்தீப் சைனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இளம் வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியதால் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.