இன்று மூன்றாவது டி20 போட்டி! தொடரை வென்று மாஸ் காட்டுமா இந்திய அணி?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.


இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 ,ஒருநாள் போட்டி ,டெஸ்ட் போட்டி ஆகிய தொடர்களில் விளையாட சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி விடும். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்த போட்டியில் அவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்டுள் தகூர் சுமாராகவே பந்து வீசி வருகிறார். இதனால் அவருக்கு பதிலாக என்று நவ்தீப் சைனி களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.