இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி! பழிவாங்குமா இந்திய அணி?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது


கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை காலை தொடங்க உள்ளது. 

இதற்கு முன்பு நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பின்னர் நடந்த ஒருநாள் போட்டி தொடரை நியூசிலாந்து வென்று இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை காலை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலை உள்ளதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.