நியூசிலாந்தில் கலக்குமா இந்திய அணி? முதலாவது டி20 போட்டி இன்று தொடக்கம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.


இந்திய அணி டி20 ,ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்நிலையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று பகல் 12:20 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தியாவை பொருத்தவரை காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் T20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலாக டி20 அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ளனர். ஆனால் யார் இந்த போட்டியில் கீபிங் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் லோகேஷ் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் கீபிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் அல்லது ரிஷப் பான்ட் கீப்பிங் செய்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தனது சொந்த மண்ணில் பல்வேறு தொடர்களை வென்று வரும் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.