பெங்களூரில் இன்று இறுதிப்போட்டி! கோப்பையை வெல்லுமா இந்திய அணி? ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டு வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. 

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இன்று நடக்கவுள்ள மூன்றாவது போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த கடைசி ஒருநாள் போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது. 

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக முந்தைய போட்டியில் விளையாடவில்லை. ஆகையால் இந்த போட்டியில் அவர் விளையாடுவாரா அல்லது லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சுமாராகவே உள்ளது. ஆகையால் இந்த போட்டியில் இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெற முடியும் என்று எதிர்பார்க்க படுகிறது.