உலக கோப்பை அரையிறுதி! பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்ளும் இந்தியா! எப்படி தெரியுமா?

நடந்து கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மீண்டுமொருமுறை இந்தியா-பாகிஸ்தான் மோதுவதற்கான வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் கிரிக்கெட் வல்லுநர்கள்  கணித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி அரையிறுதியில் கால்பதித்தது. நேற்று இந்தியா மற்றும் வங்காளதேச அணிக்கு இடையேயான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அடுத்த சில ஆட்டங்களில் மூன்றாவது மற்றும் நான்காவதாக இடம்பெறப்போகும் அணிகள் தெரிந்துவிடும். இந்நிலையில் தற்போதே கிரிக்கெட் வல்லுநர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரையிறுதியில் மோதும் வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளனர்.

முதல் வழி:

இந்திய அணி தன்னுடைய கடைசி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்த வேண்டும். ஆஸ்திரேலிய அணி தன் கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோற்க வேண்டும். இவை நடக்கும் பட்சத்தில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெறும்.

இங்கிலாந்து அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோற்க வேண்டும். இது நடந்தால் 3-வது அணியாக நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழையும்.

பாகிஸ்தான் தன் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணியை வென்றால் 4-வது அணியாக அரையிறுதிக்குள் நுழையும். 1 vs 4 என்ற அடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அரையிறுதியில் நடக்கும்.

இரண்டாவது வழி:

இந்திய அணி தன்னுடைய கடைசி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்த வேண்டும். ஆஸ்திரேலிய அணி தன் கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோற்க வேண்டும். இவை நடக்கும் பட்சத்தில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெறும்.

இங்கிலாந்து அணி இன்று நடக்கும் உலகக்கோப்பை ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டும். இது நடந்தால் 3-வது அணியாக இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழையும். நல்ல ரண்ரேட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றால் பாகிஸ்தானுக்கு பலன் கொடுக்கும்.

அதாவது தன் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்காளதேசத்தை வென்றால், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் 11 புள்ளிகளில் இருக்கும். ரண்-ரேட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி 4-வது அணியாக முன்னேறும். 1 vs 4 என்ற அடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அரையிறுதியில் நடக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த லீக் ஆட்டத்தை 229 மில்லியன் ரசிகர்கள் தொலைக்காட்சியில் கண்டுள்ளனர். அரையிறுதி அல்லது உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதினால் மிகவும் பிரம்மாண்டமாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.