ஆஸி, நியூஸி அணிக்கு எதிரான இந்திய அணியில் தல தோணி உள்ளாரா?

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துஅணிக்கு இடையேயான ஒரு நாள் போட்டி மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான T20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோணி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.இது தல தோணி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.


மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான T20 போட்டிகளில் இந்திய அணியில் இருந்து தோணி நீக்கப்பட்டு இருந்தார். மேலும் அவர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவது கடினம் என்றும் பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் தோணி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். 

உலககோப்பைக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி தொடர்கள் என்பதால் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா , நியூஸிலாந்திற்கு எதிரான இந்திய அணி(ஒருநாள் போட்டி)

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ்தோணி (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான்,  அம்பதி ராயுடு, கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது, முஹம்மது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா.

நியூஸிலாந்திற்கு எதிரான இந்திய அணி (T20 போட்டி)

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ்தோணி (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான்,  கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது, , ஜஸ்ப்ரிட் பும்ரா, ரிஷப் பாண்ட், க்ருனால் பாண்டியா.