சீன ராணுவத்தினர் இந்தியர்களை தாக்கிய ஆயுதங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இரும்பு ராடில் கூர்மையான ஆணிகள்..! இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீனா கொன்றது இது தான்! என்ன ஆயுதம் இது?

கடந்த சில வாரங்களாகவே இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இருநாட்டு முக்கிய இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர். தங்களுடைய எல்லைக்கு அருகிலுள்ள ராணுவ தளத்தில் 66 முக்கியமான சாலைகளை இந்தியா நிர்மாணித்து வந்ததால் சீனா கோபமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு நாட்டு போர் வீரர்களும் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.
நேற்றிரவு இந்திய மக்களுக்கு மேலும் ஒரு துயரமான செய்தி வெளியானது. உயிரிழந்த 3 ராணுவ வீரர்கள் உள்பட மேலும் 17 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டது. மேலும் 4 பேர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய ஆயுதங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அவர்கள் துப்பாக்கி அல்லது வெடிகுண்டுகளை உபயோகப்படுத்தவில்லை. முற்றிலும் மாறான ஆயுதங்களை பயன்படுத்தி இந்திய வீரர்களை தாக்கிய செய்தியானது வெளியாகியுள்ளது.
கம்பிகள், கற்கள், முற்கள் வெல்டிங் செய்யப்பட்ட இரும்பு ராடுகள், கஜா ஆயுதம் முதலியவற்றை கொண்டு இந்திய வீரர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். சீன வீரர்கள் இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு நன்றாக தயாராகிய பின்னரே லடாக் பகுதியில் வந்திருக்க வேண்டும். இந்தத் தாக்குதலை சீனா திட்டமிட்டு நடத்தியிருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த செய்தியானது நம் நாட்டினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.