இனி மோதல் வேண்டாம்..! பின்வாங்கிய சீன ராணுவம்..! மோடியின் வியூகத்தால் தலை நிமிர்ந்த இந்திய ராணுவம்!

இந்திய சீனா நாடுகளுக்கிடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளதால் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்க சீனா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


இந்திய, சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக ராணுவ வீரர் பழனி மற்றும் ராணுவ அதிகாரி உள்பட 20 இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 50 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனாவை உலகம் முழுவதும் சீனதான் பரப்பி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இந்தியாவுடன் போரிட்டு சீண்டி பார்க்க நினைக்கிறதா சீன அரசு என சமூக வலைதளங்களில் வாதிட்டு வருகின்றனர்.  

இந்திய, சீனா நாடுகள் 3,488 கிலோ மீட்டர் தூர எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இரு நாட்டு எல்லைகள் சில இடங்களில் சரியாக குறிக்கப்படாததால் அவ்வபோது இரு நாட்டு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கடையே லடாக் எல்லையில் கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவுகிறது. நேற்று முன்தினம் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா இராணுவத்தினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். 

இந்த மோதலில் மோதலில் மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 இந்திய வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன நாட்டு தரப்பில் 43 பேர் பலி மற்றும் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிகிறது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இராணுவம் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் லடாக்கில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தின்போது, முப்படைகளும் தயார் நிலையில் இருக்க ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.  மேலும் லடாக்கில் கூடுதல் படைகளை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மோதலில் சீன ராணுவம் 43 ராணுவ வீரர்களை இழந்ததும், சர்வதேச அளவில் சீனாவிற்கு தற்போதுள்ள நெருக்கடியில் மோதல் வேண்டாம் என்று கருதி  எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என சீன நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் எந்த ஒரு மோதலையும் சீனா விரும்பவில்லை என்றும் தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். 

மோதல் நடைபெற்ற நிலையில் இந்தியா அழைக்காமலேயே பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீனா விடுத்துள்ள அழைப்பு மோடியின் வியூகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் இந்திய ராணுவத்தை தலை நிமிர வைத்த நகர்வு என்றும் புகழப்படுகிறது.