ரோகித் சர்மா செய்த சிறப்பான சம்பவம்! கதறிய வங்கதேச அணி!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே பங்களாதேஷ் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து ஆடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் அவுட் ஆன பிறகு, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சரியாக விளையாடாதால் ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணியினர் ரன் குவிக்க தடுமாறினர்.

எனினும் பங்களாதேஷ் அணியின் கேப்டன் முஹம்மதுல்லா விளையாத விளையாடி 30 ரன்களை எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இதனால் பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது. 

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா தொடக்கம் முதலே பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்.

சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 15.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஆட்டநாயகனாக ரோகிட் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார்.