கோஹ்லி செய்த தரமான சம்பவம்! கதறிய மேற்கிந்திய தீவுகள் அணி!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லிவிஷ் 17 பந்துகளில் 40 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹெட்மையர் மற்றும் பொலார்ட் அதிரடியாக ஆடி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன்களை மளமளவென உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஹெட்மையர் 56 கண்களுக்கும் பொலார்ட் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.

இந்தியனின் சார்பில் சுழற்பந்துவீச்சாளர் சஹால் 2 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. ரோகித் சர்மா 8 ரன்களுக்கு ஆட்டம் இருந்தாலும், லோகேஷ் ராகுல் மற்றும் விராட் கோலி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய லோகேஷ் ராகுல் 40 வந்ததற்கு 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது. 304 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.