டி20 பைனலில் வெல்லுமா இந்திய அணி! பக்கா ப்ளான் உடன் களமிறங்கும் ரோகித் சர்மா!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற உள்ளது.


பங்களாதேஷ் அணி டி20 தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி இந்திய அணியை அபாரமாக வென்று அதிர்ச்சி அளித்தது. இரண்டாவது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அவர்களின் அபார ஆட்டத்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 

இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களில் கலீல் அகமத் கடந்த இரு போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கி வருகிறார். இதனால் இந்த போட்டியில் அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தக்கூர் விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.