இந்தியாவுக்காக புதிதாக களமிறங்கும் இளம் வீரர்! சொல்லி அடிக்கப்போகும் ரோகித் சர்மா!

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று டெல்லியில் தொடங்க உள்ளது .


இந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் அணி இந்தியா வந்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, சஞ்சு சாம்சன் இந்த தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதனால் இந்த போட்டியில் எந்த வீரர் களமிறங்குவார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் டெல்லி மைதானத்தில் காற்று மாசுபாட்டின் அளவு சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் முகமூடி அணிந்து வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தரப்பினரும் காற்று மாசுபட்டு இருப்பதால் டெல்லியில் போட்டியை நடத்த வேண்டாம் என்று தங்களது கருத்துக்களை கூறி வந்தனர் . எனினும் பிசிசிஐ அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டதால் போட்டியை திட்டமிட்டபடி டெல்லி மைதானத்திலேயே நடத்துவோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.