மீண்டும் ரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! குடும்பத் தலைவிகள் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஷாக்!

தமிழ்நாட்டில் தங்கம் விலை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது.


கடந்த மூன்று மாதமாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1500 வரை குறைந்தது. அதன்படி, அக்டோபர் முதல் தேதியன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 29,704 ஆக இருந்தது. ஆனால் ஒரே நாளில் ரூ. 400 உயர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி ரூ.30,104/- ஆக ஏறியது. இன்று மீண்டும் ரூ.48 உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,787 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,296 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,630 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,040 ஆகவும் இருந்தது.

ஆனால் இன்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,636 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,088 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,793 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,344 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

4.10.2019 - 1 grm – Rs. 3793/-, 8 grm – 30,344/- ( 24 கேரட்)

4.10.2019 – 1 grm – Rs. 3636/-, 8 grm – 29,088/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.10 ஆகவும் கிலோ ரூ.49,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..