தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து 31,000 ஆனது! இன்னும் எங்கே போகுமோ..?

தொடர்ந்து உயர்ந்துவரும் தங்கத்தின் விலை நடுத்தர மக்களை கவலை அடைய வைக்கிறது.


இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்டில் 27 ஆயிரத்தைக் கடந்துவிட்டது 

இந்நிலையில் கடந்த பல வாரங்களாக தங்கத்தின் விலையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்ட இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஒரு சவரன் 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,870 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,960 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,713 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,704 ஆகவும் இருந்தது. 

இன்று சவரனுக்கு 112 ரூபாய் வரை உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,727 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,816 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,884 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 31,072 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு: 

29.8.2019  - 1 grm – Rs. 3884/-, 8 grm – 31072/-  ( 24 கேரட்) 

29.8.2019 – 1 grm – Rs. 3727/-, 8 grm – 29816/- (22 கேரட்) 

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 52.30 ஆகவும் கிலோ ரூ.52,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..