ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

ஏஜிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


மிகவும் பழமை வாய்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் இல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத 24 கோடி ரூபாயும் தற்போதைக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் அவர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

அதாவது பிகில் திரைப்படத்தின் மூலம் போட்டு லாபத்தை எடுக்க முடியவில்லை எனவும் பல திடுக்கிடும் கருத்துக்கள் வெளிவந்த நிலையில் இருந்தன. இருப்பினும் பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாகவும் அதன் மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான திரையரங்குகள் அலுவலகங்கள் என மொத்த இடங்களிலும் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது. இந்த திரைப்படத்தின் கதாநாயகனான விஜய்யின் வீட்டிலும் அவருக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக ஈசிஆரில் அமைந்திருக்கும் விஜயின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.

மாஸ்டர் திரைப் படத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய் நெய்வேலியில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்று இருந்தார் . அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஜய்யை கையோடு அழைத்து வந்துள்ளனர்.

அப்படியாக அழைத்து வரப்பட்ட நிலையில் விஜையை தன்னுடைய சொந்த காரிலும் கூட பயணிக்க அதிகாரிகள் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.

 பின்னர் அவரது இல்லத்திலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனையிட்டுள்ளனர். அவர்களது சோதனை விடிய விடிய நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் இன்றைய தினமும் அவரது வீட்டில் சோதனை நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

 

இத்திரைப்படத்தில் விஜய் பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலான இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் ஆய்வின் முடிவில் தான் உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.