அதிகாலை! பிரபல நடிகை வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள்! அதிர்ச்சி காரணம்!

வரி ஏய்ப்பு செய்ததாக கூறி கலர்ஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தை சார்ந்த நடிகை மந்த்ராவின் இல்லத்தில் இன்று காலை அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


இந்த கலர்ஸ் நிறுவனம் கடந்த 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உடல் எடை குறைப்பு மற்றும் அழகுக்கலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டிருக்கிறது. கலர்ஸ் நிறுவனத்திற்கு தென்னிந்தியாவில் சுமார் 50 கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தின் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது கலர்ஸ் நிறுவனத்தின் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் அமைந்துள்ள கலர்ஸ் நிறுவனத்தை சார்ந்த எல்லாக் கிளைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் விஜய் கிருஷ்ணா என்பவராவார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மந்த்ரா கிருஷ்ணாவின் உறவினர் ஆவார். கலர்ஸ் எடை குறைப்பு விளம்பரத்தில் நடிகை மந்த்ரா மற்றும் ரம்பா போன்றோரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நடிகை மந்த்ராவின் இல்லத்தில் கலர்ஸ் நிறுவனத்தின் சார்பாக வரி ஏய்ப்பு செய்ததாக கூறி இன்று அதிகாலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர். 

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட கலர்ஸ் ஹெல்ப் கேர் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை , கோயம்புத்தூர் என பல நகரங்களில் தங்களுடைய கிளைகளை அமைத்து உள்ளது. தமிழ்நாட்டைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உம் பல கிளைகளுடன் தங்களது பணியினை வாடிக்கையாளர்களுக்கு செய்து வருகிறது கலர்ஸ் நிறுவனம். இன்னிலையில் கலர்ஸ் நிறுவனம் தங்களுடைய வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக புகார் ஒன்று வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக கலர்ஸ் நிறுவனத்தின் எல்லாக் கிளைகளிலும் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். காரணமாக கலர்ஸ் நிறுவன உரிமையாளரின் உறவினரான நடிகை மந்த்ராவின் இல்லத்திலும் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறாக மேற்கொண்ட சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு சம்பந்தமான பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.