7 நாடுகளில் சொத்துகள் வாங்கி குவிப்பு..! அம்பானி குடும்பத்தை துரத்தும் வருமான வரித்துறை! அம்பலமான பரபர தகவல்!

முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் சார்பாக இதுவரை வெளிநாடுகளில் இருக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை பற்றிய முழு விவரங்களை ஏழு நாடுகளில் இடம் கேட்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


கடந்த மார்ச் 28ஆம் தேதி, முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் ஆகியோருக்கு கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் அந்த தகவல்களை ரகசியமாக பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நோட்டீஸ் முக்கியமாக கணக்கில் காட்டப்படாமல் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை பற்றின விவரங்களை பெறுவதற்காக அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளை அடிப்படையாகக் கொண்ட கேபிட்டல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மற்றும் கேமேன் தீவுகள் ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனம் சார்ந்த பயனாளர்கள் ஆக முகேஷ் அம்பானி இருந்துள்ளார். ஆனால் அதனைப் பற்றிய தகவல்களை அவருடைய வருமான வரித்துறை கணக்கில் காட்டவில்லையாம். இந்த புகாரை அடிப்படையாக வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் முகேஷ் அம்பானிக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

ஏற்கனவே கருப்பு பணங்களை வெளிநாட்டில் பதுக்கி வைப்பவர்களை தடுக்கும் நோக்கில் நம் நாடு மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் வைத்துள்ளது. அவ்வாறாக வைக்கப்பட்டுள்ள ஏழு நாடுகளின் உதவியை தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த வழக்குக்காக நாடியுள்ளனர் . இதன் மூலம் முகேஷ் அம்பானியின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய விவரங்கள் ஆகியவை அந்த ஏழு நாடுகளில் இருந்து பெறப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். வருமான வரி துறையினருக்கு தேவையான தகவல்கள் இன்னும் 90 நாட்களில் கிடைக்கும் நிலையில் அந்த புகார் உண்மையானால் முகேஷ் அம்பானியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.