திருமணத்திற்கு முன்பே கேட்க கூடாததை கேட்ட மணமகன்..! நேராக போலீஸ் ஸ்டேசன் சென்ற டாக்டர் மணமகள்! சென்னை பரபரப்பு!

காவல்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது சம்பவம் நாங்கள் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இன்று காலை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வரதட்சனை புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

சென்னையில் டி.எஸ்.பி ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவரின் மகனுடன் எனக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அப்போது அவருடைய குடும்பத்தினர் எங்களிடம் வரதட்சனை கேட்டனர். ரொக்கமாக 50 லட்சம் ரூபாயும், 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டையும் எழுதி கேட்டனர். முதலில் 10 லட்சம் ரூபாயை வழங்கினோம். அதில் அவர்கள் ஒரு காரை வாங்கி, தாயின் பெயரில் பதிவு செய்து கொண்டனர். மேலும் வீட்டையும் அவர்களது பெயரில் மாற்றி எழுதி வைக்குமாறு கூறினர்.

இது குறித்து பேசுவதற்காக, மறைமலைநகரில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு சென்றோம். பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று அவர்கள் வளர்த்து வந்த நாயை ஏவி கடிக்க வைத்தனர். அதில் எங்கள் வீட்டு பெண்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். திருமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். ஆனால் அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மண்டபம் பதிவுசெய்யப்பட்டு, திருமண பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட பின்னர் தற்போது திருமணத்தை நிறுத்திவிட்டனர். ஆகையால் விரைந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அந்த மருத்துவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவமானது இன்று காலையில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.