புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகையில் ஐ.டி ரெய்டு!

புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் 35க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதியில் ஆதிகாலத்து அலங்கார மாளிகை என்று பிரபல ஜவுளிக்கடை உள்ளது 40 ஆண்டு பாரம்பரிய ஜவுளிக்கடையில் இன்று காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதியில் உள்ள கடைகளில் ஐ.டி ரெய்டு நடைபெற்று வருகிறது.

திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையர்  நாகராஜன் தலைமையில் 8 கார்களில் 35க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கடந்த காலங்களில் வரி ஏய்ப்பு எதுவும் நடந்துள்ளதா என ஆராயப்பட்டு வருகிறது.

முறையாக வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கடையில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடைபெற்ற பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

ஆதிகாலத்து அலங்கார மாளிகை ஜவுளிக்கடை உரிமையாளர்கள் அருண் மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இவர்கள் முறைகேடில் ஈடுபட்டதாக கூறப்படுவது பற்றி விசாரணை நடைபெறுகிறது என சொல்லப்படுகிறது.