சுயேட்சை வேட்பாளரை பத்தி பேசாதீங்க! தினகரனுக்கு சூடேற்றிய ஓ.பி.எஸ் மகன்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-


தேனி நாடாளுமன்ற தொகுதியில் நாளை முதல் பிரச்சாரம் தொடங்க உள்ளேன். வேட்பு மனு தாக்கல் பற்றி கட்சி தலைமை அறிவிக்கும். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. தேனியில் அதிமுகவிற்கும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் இடையே தான் போட்டி. 

சுயேட்சையுடன் (டி.டி.வி.தினகரன்) போட்டி பற்றி பேசவிரும்பவில்லை. தேனியில் போட்டி என்று தினகரன் கூறவில்லை. போட்டியிட வேண்டும் என்று அவரது கட்சியினர் விரும்புவதாகவே தினகரன் கூறியுள்ளார்.

அப்படியே தினகரன் போட்டியிட்டாலும் அவர் சுயேட்சை வேட்பாளர் தான். எனவே அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம். நான் நேற்று கட்சியில் சேர்ந்து இன்று எம்பி தேர்தலில் சீட் வாங்கவில்லை.

20 வருடங்களாக அதிமுகவிற்கு உழைத்துள்ளேன். அம்மா இருந்த போதே கட்சியில் பொறுப்பிற்கு வந்துள்ளேன். எனவே இது வாரிசு அரசியல் இல்லை..இவ்வாறு அவர் கூறினார்.