முதல் மனைவி கர்ப்பம் ஆகவே மாட்டார்..! ஆனால் 2வது மனைவி..? கிராமம் முழுவதும் டபுள் மனைவிகளுடன் காட்சி தரும் கணவன்கள்..! எங்கு தெரியுமா?

ராஜஸ்தானில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில் அங்கிருக்கும் ஆண்கள் ஒரு விசித்திரமான காரணத்திற்காக 2 முறை திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை தங்களுடைய கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர்.


ராஜஸ்தான் மாநிலத்தில், பார்பர் மாவட்டத்தில் இந்தோ-பாக் எல்லைக்கு அருகில் தேரசர் கிராமம் உள்ளது. சுமார் 600 க்கு மிகாமல் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது இந்த தேரசர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்கள் நெடுங்காலமாகவே ஒரு கொள்கையை தங்களுடைய கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர். இங்கு வசித்து வரும் ஆண்கள் அனைவரும் இரண்டு மனைவிகளை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் இந்த பழக்கம் அங்கு நிலவுவது இல்லை. 

அந்த கிராமத்தில் பல முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு திருமணங்களை செய்து கொள்வது முஸ்லிம் மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த கலாச்சாரம் அவர்களின் மதத்திற்கும் அப்பாற்பட்டதாக விளங்கி வருகிறது. அதாவது அங்கு வாழ்ந்து வரும் ஒரு ஆண் முதல் மனைவியை திருமணம் செய்துகொண்ட பிறகு கட்டாயம் இரண்டாவது திருமணமும் செய்து கொள்ள வேண்டுமாம். ஏனெனில் அந்த ஆண் திருமணம் செய்து கொண்ட முதல் மனைவியிடமிருந்து அவருக்கு குழந்தையே பிறக்காது என்று கூறுகின்றனர் அந்தப் பகுதி மக்கள். 

அவருக்கு குழந்தை வேண்டுமென்றால் அவர் கட்டாயம் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். இரண்டாவது திருமணம் செய்துகொண்ட உடனேயே அந்த நபருக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுகின்றனர். தங்களுடைய முதல் மனைவியிடம் இருந்தே நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்த பலர் தங்களுடைய வயதில் பாதையை கடந்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய ஆண்கள் மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட உடனேயே அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது என்று உறுதி அளிக்கின்றனர் அந்தப் பகுதி வாசிகள். இது கேட்பதற்கு சற்று ஆச்சரியம் தரக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.