கேமரா..! LED பல்புடன் கிணற்றுக்குள் இறங்கியது அதிநவீன ரோபோ! திக்திக் மனநிலையில் சுர்ஜித் பெற்றோர்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்-ஐ காப்பாற்றுவதற்காக எல்இடி பல்புகள் உடன் கூடிய அதிநவீன ரோபோ கிணற்றுக்குள் இறக்கபட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் இடத்தில் அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்னும் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் இரண்டு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

தற்போது அண்ணா பல்கலைக்கழக குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன ரோபோ ஒன்று சுர்ஜித்தை காப்பாற்றுவதற்காக ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் எல்இடி பல்புகள் , ரெக்கார்டர் , அதிநவீன சென்சார்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரோபோ அந்தக் கிணற்றுக்குள் சென்றவுடன் குழந்தையின் மேலே பட்டவுடன் சென்சார் வேலை செய்ய ஆரம்பித்து குழந்தையின் கைகளை இறுகப் பிடித்து விடும் . அதற்கு பிறகு குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வர இயலும் என்று ரோபோவை தயாரித்த அண்ணா பல்கலைக்கழக குழுவினர் தெரிவித்துள்ளனர். 

உள்ளே செலுத்தப்பட்ட அந்த சிறிய ரக ரோபோ சிறுவனின் ஒரு கையை மட்டும் இருக்க பிடித்துள்ளது என்று கூறப்படுகிறது. மற்றொரு கையையும் அந்த ரோபோ பிடித்து விட்டால் உடனடியாக சிறுவனை மேலே கொண்டுவர எளிதாக இருக்கும் என்று மீட்புக்குழுவினர் கூறுகின்றனர்.