ஒவ்வொரு ஆணுக்கும் 4 மனைவிகள்! ஆனால் கடைசி வரும் உடன் வரும் மனைவி யார் தெரியுமா?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்ற கண்ணதாசன் கவிதையைக் கேட்டிருப்பீர்கள்

கடைசி வரை நம்முடன் வருவது தாயா, தந்தையா, மனைவியா, மகனா, கணவனா, மகளா அல்லது நண்பர்களா என்ற கேள்விக்கு ஒரே விடை இவர்கள் யாரும் இல்லை என்பது தான். நான் உயிர் வாழும் வரும் காலம் வரை நம்முடன் வருவது ஆன்மாதான்

உண்மையில் நாம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

மூன்றாவது மனைவி நமது சொத்து, சுகம். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

நமது இரண்டாவது மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் வரப்போவதில்லை.

நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை வரப்போவது நமது ஆன்மாதான்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிரந்தரம் இல்லை. நம் உடலை காட்டிலும் வேறு யாரும் நமக்கு உதவ முடியாது. நுரையீரலுக்கு-பிராணாயாமம், மூளைக்கு-தியானம், உடம்புக்கு-யோகாசனம், இதயத்துக்கு-நடைபயிற்சி, உடலுக்கு-நல்ல உணவு, ஆன்மாவுக்கு-நல்ல எண்ணங்கள், உலகுக்கு-நல்ல செயல். இவற்றை கடைபிடித்தாலே போதும் ஆரோக்கியமான உடலோடு நீண்ட காலம் வாழலாம்.