ஆடி மாதத்தின் முதல் நாளே பண்டிகை தினம் தான். 'ஆடிப் பண்டிகை' என்றழைக்கப்படும்
ஆடி மாதத்தில் பெண்ணை தாய் வீட்டுக்கு அழைப்பதன் உண்மையான காரணம் தெரியுமா? ஆடியில் சுபநிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்பதற்கும் காரணம் இருக்குதுங்க...

இத்திருநாளில் புதுமணத் தம்பதிகளுக்கு சீர் செய்து அவர்களைப் பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து கொடுப்பார்கள். பிறகு கணவரை மட்டும் அனுப்பிவிட்டு பெண்ணை மாதம் முழுவதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.
மேலும் ஆடியில் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவித்த தாய்க்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே சித்திரை மாதம் குழந்தை பிரசவிப்பதை தள்ளிப்போடுவதற்காகவே ஆடியில் கருத்தருக்காமல் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
புது தம்பதியினரைப் பிரிப்பதற்கு இது மட்டுமே காரணம் ஆகாது. புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும். மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் செல்கின்றனர் என்றுகின்றனர்.
கணவனின் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது. எனவேதான் திருமணங்களும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை என்கின்றனர் முன்னோர்கள். புரட்டாசி, மார்கழி மாதங்களிலும், இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக போற்றப்படுவதால் திருமணங்கள் நடைபெறுவதில்லை.