திருப்பதி வெங்கடாஜலபதியின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு? அதிகமாக எவ்வளவு வசூல் வந்துள்ளது? ருசிகர தகவல்கள்

திருப்பதி: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள் போல நன்கொடைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு ஏழுமலையான் சொத்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

1958-ம் ஆண்டு நவம்பர் 28ம்தேதி ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. பெரிய சாதனையாக கருதப்பட்டது. அதுவும் ஒரே பக்தர் ரூ.1 லட்சம் கரன்சி நோட்டுகளை கட்டு கட்டாக உண்டியலில் போட்டதால் இந்த சாதனை ஏற்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில் 10 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்துக்கோயில் பாரம்பரியத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குவது ஒரு முக்கிய கடமையாக இருக்கிறது. திருப்பதிக்கு தினமும் உலகெங்கிலுமிருந்து லட்ச லட்சக்கணக் மக்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் எந்நேரமும் இலவச உணவருந்துவதற்கு பேருதவியாக இருப்பது திருப்பதி கோயில் உண்டியலில் பக்தர்கள் பணமாக போடுகின்ற காணிக்கை மற்றும் அவர்கள் கோவிலுக்கு கொடுக்கின்ற நன்கொடைகள் தான்.

இதற்காக தனியாக அன்னதான டிரஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நித்ய அன்னதான டிரஸ்டுக்கு 2015 ஏப்ரல் மாதம் வரை ரூ.591 கோடி நன்கொடையாக வந்து உள்ளது. .மேலும் தினந்தோறும் டிரஸ்டுகளுக்கு நன்கொடை வந்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வசூலாகிறது.

2017-ம் ஆண்டு உண்டியல் மூலம் ரூ.995.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த வாரம் திருப்பதி திருமலை கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த வெளிநாட்டு வாழ் இந்திய நண்பர்கள் இருவர் சேர்ந்து, திருமாலை வழிபட்ட பிறகு திருப்பதி கோவில் சார்பில் பக்தர்கள் வசதிகளை மேம் மேம்படுத்தவும், சமூக சேவை காரியங்களில் ஈடுபடுகின்ற திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக நடத்துகின்ற பல்வேறு இயக்கங்களுக்கு 14 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்கள். அவர்களுக்கு கோயில் சார்பாக மரியாதை செய்யப்பட்டு திருப்பதி ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதே போன்று கடந்த வாரத்தில் ஐதராபாத் நகரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். இரு தினங்களுக்கு முன்பு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு தனது குடும்பத்தாரோடு வந்து வழிபாடு செய்த டெல்லி நகரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் திருப்பதி கோவிலில் நடைபெறுகின்ற அன்னதான சேவை நன்கொடையாக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலர்களிடம் வழங்கினார்.