திருமலை தெய்வம் ஸ்ரீமத் நாராயணர் அற்புதம். செல்வம் கொட்டுவது இதனால்தான்!

அகில உலகங்களையும் காத்து ரக்ஷிக்கும் ஸ்ரீமன் நாராயணன் கலியுகத்திலே சப்தகிரி என்றும் ஏழுமலை என்றும் போற்றப்படும் திருத்தலத்தில் ஸ்ரீவேங்கடாஜலபதியாக எழுந்தருளியிருக்கிறார்.


இங்கு மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து வந்து பூமாதேவியை மீட்டதால் வராஹகிரி. விருக்ஷபாசுரன் என்ற அசுரனை பகவான் ஆட்கொண்டு அருள் புரிந்ததால் விருக்ஷபகிரி. அஞ்சனாதேவி தேவியானவள் மாதவம் செய்து சிவபெருமானின் திருவருளால் ஆஞ்சநேயனை பெற்றதால் அஞ்சனாகிரி. ஆதிசேஷனே திருமலையாகி ஸ்ரீநிவாசனைத் தாங்குவதால் சேஷகிரி.

வேம் என்றால் பாவம், கடம் என்றால் எரித்தல். இப்படியாக பாவங்களை எரிக்கும் மகத்துவத்தால் வேங்கடகிரி. ஜெகத்ரட்சகனான ஸ்ரீமத் நாராயணர் கலியுக தெய்வமான தாமே வந்து கோயில் கொண்டதால் நாராயணகிரி.

லோக க்ஷேமத்துக்காக மிகப்பெரிய யாகங்கள் பல செய்யும் ஞான ரிஷிகளின் இருப்பிடமானதால் ஞானகிரி. இப்படியாக ஏழு மலைகளின் அருள் உறைவிடமாகத் திகழ்கிறது திருப்பதி திருமலை.

பூவுலகில் புனித மலையாகத் திகழும் இந்த திருமலை திருப்பதியெங்கிலும் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன என்று புராணங்கள் கூறுகின்றன. அதில் பிரதான தீர்த்தங்களாக சுவாமி புஷ்கரணி, தும்புரு தீர்த்தம், நாரததீர்த்தம், ஆகாயகங்கை, பாபவிநாச தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், கிருஷ்ண தீர்த்தம், சக்கர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், கபில தீர்த்தம், தொட்டி தீர்த்தம், குமார தாரை, விஷ்வக்ஸேன தீர்த்தம், பஞ்சாயதத் தீர்த்தம்,

இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கோகர்ப்ப தீர்த்தம் என்று 18 புண்ணிய தீர்த்தங்கள் விவாதித்துள்ளன. இந்த 18 தீர்த்தங்களிலும் முறையோடு நீராடினால் குறைவில்லாப் பெரு வாழ்வு பெறுவர் என்று கூறுகிறது வெங்கடேச பராக்கிரமம் என்ற நூல்.

மெய்ஞான விதிப்படி ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு வினைகளைத் தீர்க்க வல்லது என்பது மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும் கண்டறிந்த உண்மையாகும்.