இனிமே ஒரு ஸ்விட்ச் போட்டால் போதும்..! மெசினில் இருந்து வந்து விழும் மாஸ்க்..! எங்கு தெரியுமா?

சிங்கப்பூரில் முகக் கவசங்கள் செய்து அதனை தானியங்கி இயந்திரங்கள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்ய புதுமையான திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.


உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை. சிங்கப்பூரில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முக கவசங்களை அணிவது உலகமெங்கும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் வருகிற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மால்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் 20க்கும் மேற்பட்ட தானியங்கி இயந்திரம் மூலமாக முக கவசங்களையும் மக்களுக்கு விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முக கவசங்களை தானியங்கி இயந்திரம் மூலமாக மக்களுக்கு கொடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் அந்நாட்டிலுள்ள ரேசர் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த நிறுவனம் விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தானியங்கி இயந்திரங்கள் மூலமாக முதல் கட்டமாக 50 லட்சம் முகக் கவசங்கள் மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.