சிசிடிவி காட்சியில் பதிவான அதிசயக் காட்சி! நள்ளிரவில் ஊஞ்சலாடிய பத்திரகாளியம்மன்!

அந்தியூர் பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மன் ஊஞ்சல் ஆடியதாக வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் திருக்கோயில். இந்த கோயிலில் திருக்கார்த்திகை தினமான டிசம்பர் 10ஆம் தேதி, செவ்வாய்க் கிழமை அன்று இரவு 8.00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

பாதுகாப்பிற்காக கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கோயிலில் இருக்கும் செயல் அலுவலர் அறையில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணிக்கும் திரையில், அம்மனின் கருவறையில் பொருத்தியிருந்த காட்சிகளை கண்ட போது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அந்த காட்சியில் வெள்ளை நிறத்தில் திரைச்சீலையில் அசையும் காட்சி பார்த்தனர். ஒருவேளை தீப்பற்றி எரியும் காட்சியோ என மீண்டும் மீண்டும் அந்த காட்சி பார்த்த போது தான் ஆச்சரியம் தெரிந்தது. கோயிலின் செயல் அதிகாரி சரவணன் மற்றும் கோயிலின் அறநிலைய ஊழியர்கள் இந்த காட்சியை பார்த்தனர். அந்த திரையில் தீப்பற்றவில்லை. அதில் ஏதோ ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்ற தெரிந்தது.

சிசிடிவி முழுமையாக பார்த்த போது இரவு 8.30 மணியளவில் ஒரு பெண் உருவம் அம்மனின் கருவறைக்குள் செல்வது போன்றும், அதன் பின்னர் திரைச்சீலையைத் தொடுவதுமாக இருந்தது. இரவு 10.45 மணியளவில் உருவம் மறைந்தது. கிட்டத்தட்ட 2.15 மணி நேரம் நிகழ்ந்த இந்த காட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோர் பார்த்த ஆச்சரியத்துடன் வீடு திரும்பினர்.

மறுநாள் காலை கோயில் நடையை திறந்து பார்த்து, கருவறை கேமராவில் ஏதேனும் பூச்சி குறிக்கிட்டுள்ளதா, சிலந்தி வலை உள்ளதா என பார்த்த போது, அப்படி எதுவும் இல்லை என தெரிந்தது. அதனால் இரவில் ஊஞ்சலாடியது பத்திரகாளி உருவம் தான் என வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

அதன் பின்னர் மீண்டும் அப்படி அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என கோயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.