சிவ லிங்கத்துக்கு அபிஷேகமாக கொட்டும் ஊற்று நீர்..! அதிசய திருத்தலம் எங்கு இருக்கிறது தெரியுமா?

இந்திய நாட்டில் நடக்கும் ஆன்மீக அதிசயங்கள் பல உலகில் உள்ள எந்த நாட்டிலும் நடப்பது கிடையாது.


இறை சக்தியின் முழு ஆற்றலும் நம் இந்திய திருநாட்டில் எப்போதும் நிலைத்திருக்கிறது என்பதற்கு சான்றாக என்னிலடங்கா அதிசயங்கள் பல இங்கு நித்தமும் நடக்கிறது. அந்த வகையில் சிவ லிங்கத்திற்கு எப்போதும் அபிஷேகம் செய்யும் நீர் ஊற்றை பற்றி பார்ப்போம்.

ஆந்திர மாநிலம், ஐதராபாத்திற்கு அருகில் உள்ள கிஷன் பாக் என்னும் ஊரில் அமைந்துள்ளது காசி புக்கா கோவில். இந்த கோவிலில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அந்த சிவலிங்கத்திற்கு எந்நேரமும் ஒரு நீருற்று அபிஷேகம் செய்த வண்ணமே உள்ளது. அந்த நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கு தெரியவில்லை. இது காசியின் தீர்த்தம் என்று கருதப்படுகிறது. இந்த நீர் ஊற்றிருக்கு அபோர்வை சக்தி உண்டு என்று நம்பப்படுகிறது.  

அந்த காலத்தில் அந்நிய படையெடுப்புகளில் இருந்து இந்த கோவிலை காக்க, இந்த கோவில் கீழ் தளத்தில் கட்டப்பட்டுள்ளது. அதோடு மற்ற கோவில்களை போல அல்லாமல் இது சாதாரண வீடு போல கட்டமைக்க பட்டுள்ளது. இதனால் அந்நியர்கள் இதை கோவில் என்று எண்ணாமல் விட்டுசென்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் இது கட்டமைக்கப்பட்டது. அதே போல அந்நியர்கள் யாரும் இதைத் தொடவில்லை.