அம்மாவை அந்த மாமா ரூமுக்குள்ள வச்சி என்னமோ பண்ணுனாங்க! நேரில் பார்த்த 6 வயது மகன் கொடுத்த வாக்குமூலம்!

மனைவி உயிரிழந்து 2 மாதங்கள் பின்னர்தான் அவர் கொலை செய்யப்பட்டது அவருடைய 6 வயது மகனின் சாட்சி மூலம் தற்போது தெரியவந்துள்ளது.


கர்நாடக மாநிலம் சின்னயனாபால்ய கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் - சுமலதா தம்பதியினர் ஆவர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். 

சுமலதாவிற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி நெஞ்சுவலி என்று அவர் கூறுவது வழக்கமாகும்.

திடீரென்று சுமலதா யாருமே எதிர்பாராத வகையில் தன்னுடைய வீட்டில் கடந்த 18ம் தேதி இறந்து கிடந்துள்ளார். உடனே வீட்டிலிருந்த அனைவரும் சுமலதா நெஞ்சுவலியால் இறந்து இருப்பார் என்று நம்பினர். மேலும் இது இயற்கையான மரணம் என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் தற்போது இந்த மரணம் இயற்கையானது அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. மனைவி சுமலதா இறந்து தற்போது இரண்டு மாதங்கள் முழுமையடைந்து உள்ளன.

இதனையடுத்து சுமலதாவின் ஆறு வயது மகன் தன் தந்தையிடம் பல திடுக்கிடும் தகவல்களை கூறி இருக்கிறான் . அவன் கூறிய தகவல் தான் இந்த மரணம் கொலை என்பதை கண்டறிய வகை செய்துள்ளது.

அதாவது, "அம்மாவை அந்த மாமா ரூமுக்குள்ள வச்சி என்னமோ பண்ணுனாங்க.. " என்று சுமலதாவின் மகன் தன் தந்தையிடம் கூறியிருக்கிறான். இதனைக் கேட்ட சுமலதாவின் கணவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் தன் மகனை அழைத்துக்கொண்டு போலீசிடம் சென்று புகார் அளித்திருக்கிறார். போலீசார் சிறுவன் கூறியதை வைத்து மற்றொரு கோணத்தில் வழக்கை விசாரிக்கத் துவங்கி உள்ளனர்.

அப்போது போலீசாரிடம் இந்த சிறுவன், ஒரு நாள் வெங்கடேஷ் மாமா எங்கள் வீட்டிற்கு வந்தார் . அப்போது என் அம்மாவை தனியாக ஒரு ரூமுக்குள் அழைத்துச் சென்று அடித்தார். 

அதுமட்டுமில்லாமல் புடவையால் என் அம்மாவின் கழுத்தை அவர் நெறித்தார் . அதை நான் பார்த்தேன். உடனே என்னம்மா மயங்கி கீழே விழுந்ததை பார்த்த வெங்கடேஷ் மாமா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று அந்த சிறுவன் போலீசாரிடம் கூறினான்.

இதன் மூலம் சுமலதா கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர். பின்னர் வெங்கடேஷை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

விசாரணையின்போது போலீசாருக்கு பல தகவல்கள் தெரியவந்துள்ளது. சுமலதாவிற்கும் வெங்கடேசன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

சுமலதா வெங்கடேஷிடம் இந்த உறவை நாம் முறித்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் . இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் அவரை கொலை செய்ய முடிவு எடுத்து கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.