பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இந்தியாவின் மிராஜ் போர் விமானம்! எப்படி பட்டது தெரியுமா?

எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழிக்க பயன்படுத்தப்பட்ட மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன


பார்க்கவே செமத்தனமான கம்பீரத்துடன் தோற்றமளிக்கும் மிராஜ் 2000 விமானம், பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்தாகும். 14.36 மீட்டர் நீளம் கொண்ட மிராஜ் 2000 போர் விமானம் 5.20 மீட்டர் உயரத்துடன் அண்ணாந்து பார்க்க வைக்கும்.

விமானத்தின் எடை 7 ஆயிரத்து 500 கிலோ, சுமார் 17,000 கிலோ எடையை தாங்கும் வல்லமை உடையது மிராஜ் 2000.

மிராஜ் 2000  மணிக்கு 2 ஆயிரத்து 336 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. போர் காலத்திற்கு ஏற்ற   தொழில்நுட்பங்கள் இதில் உண்டு.  DEFA 554 ரக பீரங்கிகள் தலா 2 மிராஜ் 2000 போர் விமானத்தில் இருக்கும்.

இவை ஒரு நிமிடத்திற்கு ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 800 ரவுண்டுகள் வரை தோட்டாக்களை பாய்ச்சும். தாலேஸ் RDY 2 ரேடார் மூலம் வானிலும், தரையிலும் தொலைவில் உள்ள இலக்குகளை எளிதில் கண்டறிய முடியும். 

டாப்லர் ஒளிக்கற்றை மூலம் மிகவும் துல்லியமாக பார்க்கும் வசதியையும் கொண்டது மிராஜ் 2000 போர் விமானம். இந்த தொழில்நுட்பம் தான் தற்போது தீவிரவாத முகாம்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 

வானில் இருந்து தரையில் இலக்கை தாக்கும் ஏவுகணைகளையும் சுமந்து சென்று தாக்குதல் நடத்த வல்லது மிராஜ் 2000 போர் விமானம். 

லேசர் மூலம் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் MBDA BGL 1000 வெடிகுண்டு, ரேடாரில் சிக்காத ஏவுகணைகள், கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், ராக்கெட் ஏவும் அமைப்பு, ஆகியவற்றை சுமந்து செல்லும் திறன் பெற்றது மிராஜ் 2000 போர் விமானம்.

இப்படி ஒரு அதிநவீன விமானத்தை வைத்து தான் இந்தியா பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டியுள்ளது.