கடலூரை கதற விடும் கொரோனா! ஒரே நாளில் 107 பேருக்கு நோய்த் தொற்று..! காரணம் கோயம்பேடு! எப்படி தெரியுமா?

கோயம்பேடு சந்தையில் இருந்து தங்களது சொந்த ஊரான கடலூருக்கு சென்ற மேலும் 107 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சென்னையில் இதுவரை சுமார் 1400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலாக கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் கோயம்பேடு சந்தையில் வேலை செய்துவிட்டு தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில் கோயம்பேடு சந்தையில் இருந்து தங்களது சொந்த ஊரான கடலூர் மாவட்டத்திற்கு சென்ற 107 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதுவரை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்ற 131 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலமாக மொத்தமாக கடலூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஹாட் ஸ்பாட்டாக கோயம்பேடு மாறியுள்ளது .